சத்து நிறைந்த வெள்ளரிக்காய் தக்காளி சாலட்

கோடை காலத்தில் அதிகளவு சாலட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த வெள்ளரிக்காய் தக்காளி சாலட்
Published on

பழுத்த பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிது,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
வெள்ளரிக்காய் - 1/2 துண்டு,

கேரட் - 1.

தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட்டை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

கடைசியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

சத்தான வெள்ளரிக்காய் தக்காளி சாலட் ரெடி.

குறிப்பு: சாலட் செய்ய நாட்டுத்தக்காளி, ஹெப்பிரிட் தக்காளியைப் பயன்படுத்தாமல், பெங்களூர் தக்காளியை பயன்படுத்தினால் சாலட் புளிக்காது.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com