கணவரை கவர மனைவி செய்ய வேண்டியவை

மனைவியர் கணவரை காதல் வலையில் வீழ்த்த எண்ணினால், நீங்கள் பின்வரும் 6 விஷயங்களை உங்களது உடைமையாக்கிக் கொள்ள வேண்டும்.
கணவரை கவர மனைவி செய்ய வேண்டியவை
கணவரை கவர மனைவி செய்ய வேண்டியவை
Published on

எதிரெதிர் இனங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மையுடையது, அப்படி இருக்க என்னதான், இயற்கை விதிப்படி ஆணும் பெண்ணும் இணைந்தாலும், இன்றைய காலகட்டத்தில் ஒருவரையொருவர் ஈர்க்க கூடுதல் மசாலா தேவைப்படுகிறது. அவ்வகையில், ஆண்களை ஈர்க்க பெண்கள் சில முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்; அதாவது மனைவியர் கணவரை காதல் வலையில் வீழ்த்த எண்ணினால், நீங்கள் பின்வரும் 6 விஷயங்களை உங்களது உடைமையாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி என்ன 6 விஷயங்கள் என்று கேட்கிறீரா? இதோ உங்களுக்காக....

* பெண்கள் அழகிய வளைவு நெளிவுகளை கொண்டிருந்தால், ஆண்களைக் கவர்வது சுலபம்; உதாரணமாக இடுப்பு வளைவு 7:10  விகிதத்தில் இருக்க வேண்டும். அழகிய வளைவுகளுள்ள பெண்களை, ஆண்கள் ஆராதிக்க தவறுவதில்லை.

* பெண்கள் அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தலைக் கொண்டிருந்தால், ஆண்களை எளிதில் கவரலாம்; மேலும் ஆண்களை அடிமையாக்க வல்லது உங்கள் கூந்தல்.

* மேக்கப் போட்டுக்கொண்டால், ஆண்களை எளிதில் மடக்கி விடலாம் என எண்ணினால், அது தவறு பெண்களே! ஆண்கள் மேக்கப் போடாத இயற்கை அழகுடன் உள்ள பெண்களையே அதிகம் விரும்புவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், மேக்கப்பை குறைத்து, கணவரை ஈர்த்து மகிழ்வுடன் வாழுங்கள்..!

* ஓயாமல் உரத்த குரலில் கலகலவென்று பேசிக்கொண்டே இருக்கும் பெண்களை ஆண்கள் அதிகம் காதலிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

* பெண்கள் அதிகம் நகை அணிவதைத் தவிர்த்து, புன்னகையை அதிகம் அணிந்தாலே போதும், ஆண்களை எளிதாக வென்று விடலாம்..! அதிக ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கை வாழும் பெண்களே! ஆண்களின் மனதை வெல்கின்றனர்.

* ஆண்களைக் கவர நினைக்கும் பெண்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் கொண்ட ஆடைகள், பொருட்கள் இவற்றை அதிகம் உபயோகிக்க வேண்டும். ஆண்கள் அந்நிறங்களை பயன்படுத்தும் பெண்களை பெரிதும் நேசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது..!

X

Maalai Malar
www.maalaimalar.com