25 வயதில் இருக்கும் வேகம் 50 வயதில் இருக்குமா?

உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே செக்ஸை வேண்டும் அளவுக்கு அனுபவித்து விடுவது நல்லது. காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.
25 வயதில் இருக்கும் வேகம் 50 வயதில் இருக்குமா?
Published on

25 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. ஒருவரால் பிரியாணி சாப்பிட முடியாமல் போனால் பருப்பு சாதமாவது சாப்பிட்டு திருப்திபட்டுக்கொள்வார் அல்லவா? அது போலத்தான் செக்ஸும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது செக்ஸை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடும். பெண்குறியில் நீர் சுரக்காது. இதனால் கலவியின் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம். புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது. போர் அடிக்கத் தொடங்கும். இதைப் போக்க காமசூத்திராவில் சொல்லப்பட்டிருக்கும் புதிய நிலைகளை கலவிக்குப் பயன்படுத்தலாம்.

இணையுடன் இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு கூடச் செல்லலாம். இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும். படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், மனதுக்குப் பிடித்த நிறமுள்ள படுக்கை விரிப்புகள் அமைப்பது, இனிமையான இசை கேட்பது என மாற்றிக்கொண்டால் நல்ல கலவியை அந்தச் சூழலே தூண்டும்.

கலவிக்கு முன்னால் அதைத் தூண்ட சிறந்த ஃபோர் ப்ளேவும் (Fore play) அவசியம். அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பது இன்னும் நலம். மனம் சார்ந்த எந்தப் பிரச்னைகளும் ஏற்படாது. ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை கொடுக்கவேண்டும். அவ்வப்போது செக்ஸிலும் ஈடுபடுதல் வேண்டும். வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com