உடலுக்கு வலிமை தரும் சிக்கன் எலும்பு ரசம்

உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி சிக்கன் எலும்பு ரசம் வைத்து குடிப்பது உடலுக்கு வலிமை தரும். இன்று இந்த ரசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
உடலுக்கு வலிமை தரும் சிக்கன் எலும்பு ரசம்
Published on

சிக்கன் எலும்புடன் - 1/4 கிலோ (தோல் நீக்கியது)
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
தனி மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 1
வெங்காயம் - 1
எண்ணெய் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 4 டம்ளர்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

ரசப் பொடி செய்ய :

மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
பூண்டு - 2

தாளிக்க :

கடுகு,
உளுத்தம் பருப்பு,
வரமிளகாய் - 1,
கறிவேப்பிலை

செய்முறை :

சிக்கன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

ரசப்பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் சிக்கன் எலும்பை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், தக்காளி, வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு போட்டு வேக வைக்கவும்.

இருப்புச்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்1, கறிவேப்பிலை போட்டு தாளித்து, குக்கரில் உள்ள சிக்கன் எலும்பு சாற்றை ஊற்றி, அதனுடம் கரைத்த புளிக்கரைசலை ஊற்றி, நுணுக்கி வைத்திருக்கும் ரசப்பொடியை அதில் போட்டு, ரசம் நுரைத்துக்கொண்டு வரும் பொழுது கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிட வேண்டும்.

இந்த ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம், அல்லது அப்படியேயும் குடிக்கலாம்.

சூப்பராக சிக்கன் எலும்பு ரசம் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com