சூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு - சீஸ் பான்கேக்

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, சீஸ் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, சீஸ் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் பான்கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு - சீஸ் பான்கேக்
Published on

உருளைக்கிழங்கு - 2,
சோள மாவு - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
முட்டை - 2
சீஸ் - தேவைக்கு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை :

* உருளைக்கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்

* சீஸ், வெங்காயத்தை துருவிக்கொள்ளவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, சோள மாவு, வெங்காயம். ப.மிளகாய், முட்டை, சீஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றிய பின் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

* சூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு பான்கேக் ரெடி.

* இதை சாஸ், தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com