சூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் கொண்டைக்கடலை புலாவ் செய்வது கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
சூப்பரான மதிய உணவு கொண்டைக்கடலை புலாவ்
Published on

பாசுமதி அரிசி - ஒரு கப்,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5,
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
பட்டை - சிறு துண்டு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
வெள்ளை கொண்டைக்கடலை - கால் கப்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
நெய்யில் வறுத்த முந்திரி - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து கொள்ளவும்.

தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும்.

அடிகனமான வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேகவைத்த கொண்டைக்கடலை, வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, உதிராக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை, முந்திரி தூவி பின்பு பரிமாறவும்.

சூப்பரான கொண்டைக்கடலை புலாவ் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com