முந்திரி கோதுமை ரவா தோசை

குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு கொடுக்க விரும்பினால் முந்திரி கோதுமை ரவா தோசை செய்து கொடுக்கலாம். இந்த தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முந்திரி கோதுமை ரவா தோசை
Published on

கோதுமை மாவு - 500 கிராம்
கோதுமை ரவை - 100 கிராம்
உப்பு - தேவைக்கு
மிளகு - 4 தேக்கரண்டி
தயிர் - அரை கப்
சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவைக்கு
முந்திரி - 50 கிராம்

செய்முறை :

மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு, தயிர், பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு கலந்து தண்ணீர் ஊற்றி நன்றாக தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் நடுவில் முந்திரி பருப்பை தூவி, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான சத்தான முந்திரி கோதுமை ரவா தோசை ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com