வெயிலுக்கு சத்தான கேரட் லஸ்ஸி

சர்க்கரை நோயாளிகளுக்கு வெயில் காலத்தில் குடிக்க உகந்தது இந்த கேரட் லஸ்ஸி. இன்று லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெயிலுக்கு சத்தான கேரட் லஸ்ஸி
Published on

கெட்டித்தயிர் -  1 கப்,
கேரட் - 1,  
ஐஸ்கட்டிகள் - சிறிது,
[பாட்டி மசாலா] சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - 1/2 தே.க,
கருப்பு உப்பு - 1 சிட்டிகை,
ப.மிளகாய் - 1,
உப்பு தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை தோல் நீக்கி, துண்டுகளாக்கி குக்கரில் 1/4 கப் நீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும்.

ஆறிய கேரட் உடன் ப.மிளகாய், உப்பு, கருப்பு உப்பு, [பாட்டி மசாலா] சீரகத்தூள், [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

அடுத்து அதனுடன் தயிர் மற்றும் ஐஸ்கட்டிகள் சேர்த்து மீண்டும் அரைத்து டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

சூப்பரான குளுகுளு கேரட் லஸ்ஸி ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com