சத்தான ப்ரோக்கோலி கேரட் சாலட்

ப்ரோக்கோலி, கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் வைத்து சுவையான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான ப்ரோக்கோலி கேரட் சாலட்
Published on

ப்ரோக்கோலி - 100 கிராம்
கேரட் - 50 கிராம்
பெங்களூர் தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
புதினா - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
குடைமிளகாய் - 50 கிராம் விதைகள் நீக்கவும்
மிளகுத் தூள் - தேவையான அளவு.

செய்முறை :

ப்ரோக்கோலியை தண்டுடன் நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், புதினா, கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

நறுக்கிய ப்ரோக்கோலியைக் கடாயில் சேர்த்து அரை பதம் வேகும் வரை வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வதக்கிய குடைமிளகாய், ப்ரோக்கோலி, கேரட், தக்காளி, பெரிய வெங்காயம், போதுமான உப்பு, மிளகுத்தூளை சேர்த்து நன்றாக பிரட்டவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து காய்கறிகள் மீது தூவினால் சுவையான ப்ரோக்கோலி சாலட் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com