

கேழ்வரகு மாவு - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - கால் கப்,
துருவிய பீட்ரூட் - கால் கப்,
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3,
எண்ணெய் - தாளிக்க + தோசை சுடுவதற்கு தேவையான அளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு, ராகி மாவு சேர்த்து கலந்து, 10 மணி நேரம் வைக்கவும்.
* வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.
* வதக்கிய பீட்ரூட்டை மாவில் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சத்து மிகுந்த கேழ்வரகு - பீட்ரூட் தோசை ரெடி.