சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பார்லி மினி இட்லி

உடல் நலம் சரியில்லாதவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பார்லி மினி இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பார்லி மினி இட்லி
Published on

தேவையான பொருட்கள் : 

இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், 

பார்லி, முழு உளுந்து - தலா அரை கப், 

வெந்தயம் - அரை டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு.

செய்முறை : 

அரிசி, உளுந்து, வெந்தயம், பார்லி எல்லாவற்றையும் நன்றாக அலசி, நீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். 

பிறகு, கிரைண்டரில் அனைத்தையும் போட்டு நைசாக அரைத்து உப்பு போட்டு கரைத்து 4 மணி நேரம் புளிக்கவிடவும். 

இந்த மாவை மினி இட்லித் தட்டில் (அ) சாதாரண இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

சத்தான பார்லி இட்லி ரெடி. 

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com