சத்து நிறைந்த பார்லி மசாலா ரொட்டி

வயதானவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த பார்லி மசாலா ரொட்டி மிகவும் நல்லது. இன்று இந்த ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.
சத்து நிறைந்த பார்லி மசாலா ரொட்டி
Published on

தேவையான பொருட்கள் :

பார்லி - 1 கப்

அரிசி மாவு - 1 கப்

சிறுதானிய மாவு - அரை கப்

வெங்காயம் - 1

இஞ்சி - சிறிய துண்டு

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

ப.மிளகாய் - 1

சீரகம் - 1 டீஸ்பூன்

[பாட்டி மசாலா] மிளகு தூள் - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

பார்லியை 4 மணி நேரம் ஊற வைத்த பின்னர் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.

இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பார்லி, அரிசி மாவு, சிறுதானிய மாவு, ப.மிளகாய், இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சீரகம், [பாட்டி மசாலா] மிளகு தூள், உப்பு பார்லி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியாக கரைத்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தேய்த்து அதில் அந்த மாவை ஊற்றி மெல்லிதாக பரப்பி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும்.

அருமையான பார்லி மசாலா ரொட்டி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com