உடல் பருமனை குறைக்கும் பார்லி மசாலா சாதம்

பார்லியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது; உடல் பருமனை குறைக்கும். இன்று பார்லியை வைத்து மசாலா சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உடல் பருமனை குறைக்கும் பார்லி மசாலா சாதம்
Published on

தேவையான பொருட்கள் : 

பார்லி - 100 கிராம், 

பீன்ஸ் - 50 கிராம், 

வெங்காயம் - 2, 

தக்காளி - 2, 

பட்டை, கிராம்பு - தலா 1, 

[பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், 

[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், 

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : 

பார்லியை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். 

பீன்ஸ், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, எல்லாம் ஒன்றாகக் கலந்து வரும் வரை வதக்கவும். வேக வைத்த பார்லியை சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: பார்லியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது; உடல் பருமனை குறைக்கும். பார்லியை வெறுமனே சாப்பிடப் பிடிக்காதவர்கள் இவ்வாறு செய்து சாப்பிட… சுவையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com