பார்லி - பச்சைப்பயறு வெண் பொங்கல்

நோயாளிகள், வயதானவர்களுக்கு பார்லி மிகவும் நல்லது. இன்று பார்லி, பாசிப்பருப்பு சேர்த்து சத்தான பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பார்லி - பச்சைப்பயறு வெண் பொங்கல்
Published on

தேவையான பொருட்கள் :

உடைத்த பார்லி - 1 கப்,

பச்சைப்பயறு - கால் கப்,

ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம் - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை - சிறிது,

நெய் - 1 டீஸ்பூன்,

பெருங்காயம் - 1 சிட்டிகை.

செய்முறை :

இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பார்லியையும், பச்சைப்பயரையும் வெறும் கடாயில் லேசாக தனித்தனியே வறுத்து, சிறிது நேரம் ஊற வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின் பார்லி, பச்சைப்பயறு கலவையும் சேர்த்து ஒன்றுக்கு 3 அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரை மூடி 6 விசில் போட்டு குழைய வேக வைக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து சூடாகப் பரிமாறவும்.

பார்லி - பச்சைப்பயறு வெண் பொங்கல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com