குழந்தைகளுக்கு சத்தான செவ்வாழைப்பழ சப்பாத்தி

குழந்தைகள், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி இது. இந்த சப்பாத்தியை செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு சத்தான செவ்வாழைப்பழ சப்பாத்தி
Published on

தேவையான பொருட்கள் : 

கோதுமை மாவு - ஒரு கப், 

செவ்வாழைப்பழம் - 1, 

தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், 

உப்பு - ஒரு சிட்டிகை, 

எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு. 

செய்முறை: 

செவ்வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். 

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தேன், மசித்த வாழைப்பழம், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில்வைத்து சூடானதும் தேய்த்த சப்பாத்தியை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் - நெய் கலவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

சூப்பரான சத்தான வாழைப்பழ சப்பாத்தி ரெடி.

இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும். எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி. 

தேனுக்கு பதிலாக கருப்பட்டியையும் சேர்த்து கொள்ளலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com