ரத்தக் குழாய்களை பாதிக்கும் டிரான்ஸ் பேட் கொழுப்பு

எந்த எண்ணெயில் பொரித்தாலும் அது, டிரான்ஸ் பேட் என்ற கொழுப்பை உருவாக்கி விடுகிறது. இது நேரடியாக நம் இருதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கும்.
ரத்தக் குழாய்களை பாதிக்கும் டிரான்ஸ் பேட் கொழுப்பு
Published on

இந்த ஒமேகா-6 நம் ரத்தக்குழாய்களின் செல்களை டேமேஜ் செய்யும். அந்தப் பாதிப்பை சரி செய்ய நமது கல்லீரல், கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும். மேலும் விதை எண்ணெயை பயன்படுத்தி சமைத்துச் சாப்பிடும்போது நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது.

எந்த எண்ணெயில் பொரித்தாலும் அது, டிரான்ஸ் பேட் என்ற கொழுப்பை உருவாக்கி விடுகிறது. இயற்கையில் டிரான்ஸ் பேட் எனும் கொழுப்பு கிடையாது. பொரித்த உணவுகளில் இந்த கொழுப்பு உள்ளது. இது நேரடியாக நம் இருதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கும்.

இன்று முதல் நாம் டிரான்ஸ் பேட் உள்ள உணவை சாப்பிடாமல் நிறுத்தினால்கூட, நம் உடல் முழுவதும் டிரான்ஸ் பேட்கள் இல்லாமல் போக மூன்று வருடங்கள் ஆகும். எந்த உணவுப் பொருளை வாங்கினாலும், அதில் டிரான்ஸ் பேட் அளவைப் பாருங்கள். அது கொஞ்சமாக இருந்தாலும்கூட அதை வாங்கவே கூடாது.

இன்னொரு திடுக்கிடும் தகவல் வாட்ஸ் அப்பில் சுற்றுகிறது. உலகில் சூரிய காந்தி எண்ணெய் உபயோகப்படுத்தப்படும் அளவுக்கு, சூரியகாந்தி விளைச்சல் கிடையாது. அதனால், சூரிய காந்தி மற்றும் பிற விதை எண்ணெய்களுடன் பெட்ரோலிய எண்ணெய் கலக்கப்படுவதாக வதந்தி. இது உண்மையாக இருக்கும் அபாயமும் உள்ளது.

1900-களில் பன்றிக்கொழுப்பை வைத்து சோப் தயாரிக்க ஆரம்பித்தனர். செலவு அதிகரிக்கவே, நஷ்டம் அடைந்த வியாபாரிகள் பருத்தி விதை எண்ணெய் பயன்படுத்தினால் என்ன என யோசித்தனர். அதனால் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட வனஸ்பதியை உருவாக்கினர். இதில் 50 சதவிகிதம் ட்ரான்ஸ் பேட் உள்ளது. இதை மார்க்கெட் செய்வதற்காகவே உலகின் முதல் விளம்பர ஏஜென்சி தோன்றியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com