HATS OFF.. ரோகித் சர்மாவின் பேச்சைக் கேட்டு கண்கலங்கிய ஹர்திக் பாண்டியா - வீடியோ

உலகக்கோப்பை வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசினார் இது மைத்தனத்தில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
HATS OFF.. ரோகித் சர்மாவின் பேச்சைக் கேட்டு கண்கலங்கிய ஹர்திக் பாண்டியா - வீடியோ
Published on

டி20 உலகக்கோப்பையை வென்றெடுத்த இந்திய அணிக்கு நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதனத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கிரிக்கெட் ரசிகர்கள் திரளாக பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

மைதானத்தில் வைத்து இந்திய அணி வீரர்கள் பாடல்களுக்கு நடனமாடியும் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்தும் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர். உலகக்கோப்பை வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், நாங்கள் இந்தியா வந்திறங்கியதில் இருந்து இருந்து மக்களின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் காண்கிறோம். இந்த கோப்பை அவர்களுக்கே சொந்தம்.

மும்பை எப்போதும் வெற்றியை கொண்டாடுவதில் ஏமாற்றியது இல்லை. ரசிகர்கள், மக்கள் மற்றும் மொத்த தேசத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் அணியின் வீரர்கள் குறித்து அவர் பேசுகையில், ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் உலகின் பயங்கரமாக வீரர்களின் ஒருவராக விளங்கும் டேவிட் மில்லரை வீழ்த்த எங்களுக்கு பேருதவியாக இருந்தது. கடைசி ஓவரில் பதிவீசுவது எப்போதும் கடினமான ஒன்று. ஆனால் அதை செய்து காட்டிய பாண்டியாவுக்கு Hats off என்று தெரிவித்தார். ரோகித்தின் பேச்சால் நெகிழ்ச்சி அடைந்த பாண்டியா கண்கலங்கினார். இது மைதானத்தில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com