காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றது இந்தியா

இறுதி ஆட்டத்தி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி. இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 65 ரன்கள் குவித்தார்.
இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி
Published on

பர்மிங்காம்

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதன்முறையாக இடம் பெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியில் அதிபட்சமாக பெத் மூனி 61 ரன்கள் குவித்தார். கேப்டன் மெக் லானிங் 36 ரன்னும், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்தது.

இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 65 ரன்கள் குவித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்னும் எடுத்தனர். தீப்தி சர்மா 13 ரன்னும், சபாலிவர்மா 11 ரன்னும் அடித்தனர். 19.3 ஓவர் முடிவில் இந்திய அணி 152 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இதையடுதது 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

X

Maalai Malar
www.maalaimalar.com