விற்பனையகம் வரத் துவங்கிய சிட்ரோயன் C3

சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய C3 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சிட்ரோயன் C3 எஸ்.யு.வி. அந்நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல் ஆகும்.
விற்பனையகம் வரத் துவங்கிய சிட்ரோயன் C3
Published on

சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 எஸ்.யு.வி. மாடல் விவரங்களை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த மாடலின் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அம்சங்கள் அடிப்படையில் இந்த மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், புதிய சிட்ரோயன் C3 மாடல் விற்பனையகம் வரத் துவங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய சிட்ரோயன் C3 மாடலுக்கான விலை விவரங்கள் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. புதிய சிட்ரோயன் C3 மூலம் அதிக போட்டி நிறைந்த பிரிவில் களமிறங்குவதோடு, ஹேச்பேக் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களையும் குறி வைக்க சிட்ரோயன் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

தற்போது சப்-4 மீட்டல் எஸ்.யு.வி. பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது மட்டுமின்றி ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களும் இந்த பிரிவில் அதிகளவு விற்பனையாகி வருகின்றன.

இந்த மாடல்கள் மட்டுமின்றி கியா சொனெட், நிசான் மேக்னைட், டாடா பன்ச், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஹோண்டா WR-V மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கும் புதிய சிட்ரோயன் C3 போட்டியாக அமைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com