நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு

தமிழ் சினிமாவில் பிசியான காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, `கோலமாவு கோகிலா' படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #YogiBabu #Nayanthara
நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு
Published on

தனது உருவம், தலைமுடி மற்றும் கமெண்டுகளால் தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டார் யோகி பாபு. இவர் திரையில் வந்தாலே முன்னணி நடிகர்களுக்கு இணையான வரவேற்பு திரையரங்குகளில் கிடைக்கிறது. மிக வேகமாக 50 படங்களை கடந்து 100வது படத்திலும் நடித்து வருகிறார். 

இவரும், நயன்தாராவும் நடித்திருந்த `கோலமாவு கோகிலா' படத்தின் `கல்யாண வயசு' எனும் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. நயன்தாராவை யோகி பாபு காதலிக்க கேட்டு கெஞ்சுவது போல அமைந்த இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார்.

`கோலமாவு கோகிலா' படத்தில் நடிகர் யோகிபாபுவின் அசாத்திய நடிப்பைப் பார்த்து வியந்த நயன்தாரா, இந்தப் படத்திலும் யோகி பாபுவை நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளார். அடுத்து நயன்தாரா நடிக்க உள்ள பேய் படம் ஒன்றில் யோகி பாபுவை காமெடியனாக நடிக்க வைக்க இயக்குனரிடம் கூறி இருக்கிறார். யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிந்தாலும் நயன்தாராவுக்காக சம்மதித்துவிட்டாராம். #YogiBabu #Nayanthara

X

Maalai Malar
www.maalaimalar.com