விவேக் படத்தில் யோகி பி பாடல்

வி.பி.விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி வரும் ‘எழுமின்’ படத்தில் பிரபல பாடகர் யோகி பி பாட்டு பாடி இருக்கிறார். #Ezhumin
விவேக் படத்தில் யோகி பி பாடல்
Published on

வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’. இதில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். கார்த்திக் ராம் படத்தொகுப்பு செய்கிறார். மிராக்கிள் மைக்கேல்ராஜ் சண்டை பயிற்சி அளிக்கிறார்.

வி.பி.விஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த இவர் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படக்குழுவுடன் பிரபல பாடகர் யோகி பி இணைந்துள்ளார். இந்தப் படத்தில் இடம் பெறும் எழுச்சி மிகு பாடல் ஒன்றை யோகி பி பாடி இருக்கிறார். இந்தப் பாடல் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com