ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் காலமானார்

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி
ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி
Published on

நாடக கலைஞரும், நடிகருமானவர் ஒய்.ஜி.மகேந்திரன். இவரின் தாயும் கல்வியாளருமான ராஜலட்சுமி இன்று காலமானார். இவருக்கு வயது 93. உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ லட்சுமி, சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதி சடங்கு நாளை மாலை தி.நகரில் நடக்க இருக்கிறது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com