ஏமாலி

வி.இசட்.துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி நடிப்பில் இன்றைய காதலை அப்படியே சொல்லும் படம் ‘ஏமாலி’ படத்தின் முன்னோட்டம்.
ஏமாலி
Published on

‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வி.இசட்.துரை இந்த புதிய படத்தை இயக்குகிறார்.

சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம்புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

வசனம் - ஜெயமோகன், ஒளிப்பதிவு - எம்.ரத்திஷ் கண்ணா, ஐ.பிரகாஷ், இசை - சாம் டி.ராஜ், பாடல்கள் - மோகன்ராஜ், வி.இசட் துரை, படத்தொகுப்பு - ஆர்.சுதர்சன், கலை - கே.ஆறுசாமி, தயாரிப்பு - எம்.லதா, இயக்கம் - வி.இசெட்.துரை.

படம் பற்றி கூறிய இயக்குனர்...

“இந்த படத்துக்கு ‘ஏமாலி’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் காதலை ‘டேக் இட் ஈசி’ என்று சாதாரணமாக பார்க்கிறார்கள். காதலர்களிடம் பிக்அப், பார்ட்டி, டேட்டிங், அவுட்டிங், பிரேக் அப் எல்லாம் சாதாரணமாகி விட்டது. அதைத்தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறேன்.

‘ஏமாலி’ பட டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் நாயகி அதுல்யா தொடர்பான காட்சிகள் பற்றி விமர்சனங்கள் வந்தன. கதைக்கு தேவையான காட்சிகள் தான் இதில் இடம் பெற்றிருக்கின்றன” என்றார்.

‘டீசர் வெளியான பிறகு ‘ஏமாலி’ படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com