இளைய தளபதி விஜய்யில் இருந்து தளபதி விஜய்யாக மாறியது ஏன்? விளக்கம் இங்கே...

இளைய தளபதி என்று அழைத்து வந்த விஜய் ‘மெர்சல்’ படத்தில் இருந்து தளபதி என்று அழைக்க காரணம் என்ன என்பது தற்போது விளக்கம் கிடைத்துள்ளது...
இளைய தளபதி விஜய்யில் இருந்து தளபதி விஜய்யாக மாறியது ஏன்? விளக்கம் இங்கே...
Published on
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும் வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரித்துள்ளது.

இப்படத்தின் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 1980ஆம் கால கட்டத்தில் நடிக்கும் விஜய்யின் கதாபாத்திரம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் ‘தளபதி’. இதனால், படத்தின் தலைப்பில் இளைய தளபதிக்கு பதிலாக தளபதி என்று மாற்றியுள்ளார்கள். தற்போது தளபதி விஜய் என்றே அனைவரும் அழைத்து வருகிறார்கள்.

தளபதி கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பிளாஸ் பேக்கில் வரும் இந்த காட்சி சுமார் 50 நிமிடம் வருமாம். இப்படம் தீபாவளி தினத்தில் உலகமெங்கும் 3292 ஸ்கிரின்களில் வெளியிட இருக்கிறார்கள். இன்னும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com