திருமண செய்தியை கிண்டல் செய்த சுருதிஹாசன்

மைக்கேல் கார்சலேவுடன் தன்னைப் பற்றி வந்த திருமண செய்திக்கு நடிகை சுருதி ஹாசன் கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார். #Shrutihaasan #Shruti
திருமண செய்தியை கிண்டல் செய்த சுருதிஹாசன்
Published on

நடிகையும் கமல்ஹாசன் மகளுமான சுருதிஹாசனும் லண்டன் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்கிறார்கள்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலேவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுருதிஹாசன், ‘’என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது’’ என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியாக தொடங்கின. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றினை மட்டுமே தொகுத்து வருகிறார் சுருதிஹாசன்.

சுருதிஹாசனுக்கு திருமணம் என்ற செய்தியை மேற்கோள் காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், “அப்படியா? இதுவே எனக்கு செய்தி தான்” என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com