

‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகியிருப்பவர் அனந்த்ராம். ‘ஹிப் ஹாப் தமிழா ஆதியின்’ தம்பியாக நடித்த இவரது நடிப்புக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
“நடிகனாக வேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைபட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி ஸ்கூல், லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சிப் பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டேன். 4 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல வாய்ப்பை தேடி வந்தேன்.
நண்பர்கள் மூலமாக ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆதி அண்ணாவின் தம்பியாக நடித்தேன். முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதால் ஜாலியாக இருந்தது. விவேக் சார் போன்ற அனுபவமிக்க கலைஞருக்கு நான் மகனாக நடித்தது பெருமகிழ்ச்சி. இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் இருந்ததால் சண்டை பயிற்சி மற்றும் பாக்ஸிங் கற்றுக் கொண்டேன். படத்தைப் பார்த்தவர்கள் என்னுடைய நடிப்பை பாராட்டி பேசியது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதற்காக ஆதி அண்ணாவிற்கு நன்றிச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நல்ல கதாபாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும், ஹீரோவாகவும் சாதிக்க ஆசை. எல்லா வகையான சவாலான கேரக்டர்களிலும் நடிக்கும் சிறந்த நடிகராகவே இருக்க விரும்புகிறேன்.
தொடர்ந்து தெலுங்கில் ஒரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். தமிழிலும் நடிக்கிறேன்” என்றார்.