

கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார்.
தம்பி ராமையா, எஸ் பி சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
இசை - சத்யன் மகாலிங்கம், ஒளிப்பதிவு - விஜய் மில்டன், ஆர்.வி.சரண், படத்தொகுப்பு - பிரவீண்.கே.எல், என்.பி.ஸ்ரீகாந்த், கதை, திரைக்கதை, இயக்கம் - மீரா கதிரவன்.
படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறும் போது,
இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள 'சவுந்தர்யன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான சுவாரஸ்யமாக, தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார்.