டீசர் சாதனைக்கு நடுவே வெளியாகும் `விவேகம்' டிரைலர்

சிவா இயக்கத்தில் தல அஜித் - காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் ‘விவேகம்’ படத்தின் டீசர் படைத்து வரும் சாதனையை தொடர்ந்து ‘விவேகம்’ டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
டீசர் சாதனைக்கு நடுவே வெளியாகும் `விவேகம்' டிரைலர்
Published on

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் - காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் இணைந்து நடித்திருக்கும் இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ருசீகரமான தகவல் வந்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில் `விவேகம்' படத்தின் டீசர் உலகளவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கி வருவதால் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகமும் அஜித் ரசிகர்களிடைய எழுத் தொடங்கியது. இந்நிலையில், `விவேகம்' படத்தின் டிரைலர் தயாராகி விட்டதாகவும், டிரைலர் குறித்த அறிவிப்பினை படத்தின் இயக்குநர் சிவா அறிவிப்பார் என்று `விவேகம்' படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com