தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்

படங்களை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் நடப்பதாக விஷ்ணு விஷால் குற்றம்சாட்டியுள்ளார். #VishnuVishal #SilukkuvarpattiSingam #TFPC #Vishal
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
Published on

படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத்து தேதிகளை ஒதுக்கி கொடுத்து வருகிறது. சில தயாரிப்பாளர்கள் இந்த கமிட்டியை மதிக்காதது தமிழ் சினிமாவில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. 

டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக வரும் ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களை உறுதிப்படுத்தியது தயாரிப்பாளர் சங்கம். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து தயாரித்துள்ள ‘மாரி 2’ மற்றும் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ ஆகியவை இப்போட்டியில் இணைந்தன. 

இதனால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். தொடர்ச்சியாகக் குழப்பம் நீடித்ததால் டிசம்பர் 21-ம் தேதி யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து விலகிக் கொண்டது. டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டு சர்ச்சையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உள்குத்து அரசியலே காரணம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் விஷ்ணு விஷால். 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: விதிமுறைகள்... விதிகள் இன்மை... விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பவர்களுக்கு இப்படித்தான் நீதி வழங்கப்படுமா? இது முதன்முறையல்ல. இரண்டாவது முறையாக இது எனக்கு நடக்கிறது. அப்புறம் எதற்கு விதிகள்? சிஸ்டம் தோற்றுவிட்டது. உள்குத்து அரசியல். இருக்கட்டும்... வெளிப்படையான அறிக்கை என்றால் என்னவென்று பிறருக்குத் தெரிவிக்கவே இதை சொல்கிறேன். 

டிசம்பர் 21-ல் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்‘ வெளியாகிறது. கடந்த ஒரு மாதத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொண்ட வகையில் சொல்கிறேன். இத்தகைய நிலைமைக்கெல்லாம் நிச்சயமாக விஷால் காரணமல்ல. நான் ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் உள்குத்து அரசியல். விதிமுறைகள் எல்லாம் அதைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே’. இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். #VishnuVishal #SilukkuvarpattiSingam #TFPC #Vishal #ProducerCouncil

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com