ரசிகரின் டுவிட்டிற்கு பதிலடி கொடுத்த விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கதாநாயகன் படத்தை பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதலடி கொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
ரசிகரின் டுவிட்டிற்கு பதிலடி கொடுத்த விஷ்ணு விஷால்
Published on
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘கதாநாயகன்’. முருகானந்தம் இயக்கியிருந்த இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருந்தார். மேலும், சூரி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி தோன்றிருந்தார்.

விஷ்ணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரித்திருந்த இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த படத்திற்கு பல வகையில் புரோமோஷன் செய்து வந்தார் விஷ்ணு விஷால். கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சமூக வலைதளமான டுவிட்டரில் ரசிகர் ஒருவர் விஷ்ணு விஷாலிடம், ‘புரோமோட் பண்றத விட்டுட்டு நல்ல படத்துல நடிக்கலாம். இன்று நேற்று நாளை மாதிரி..” என்று பதிவிட்டிருந்தார். இந்த டிவிட்டிற்கு உடனே, படம் அந்த அளவிற்கு மோசமாக இல்லை என்றும், சிறிதளவே பப்ளிசிட்டிக்கு செலவு செய்தேன். நன்றி என்றும் பதிலளித்துள்ளார் விஷ்ணு விஷால்.
X

Maalai Malar
www.maalaimalar.com