

சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதில் நடிகர் சங்க கட்டிடத்துடன் இணைத்து, ஒரு சிறிய திருமண மண்டபமும், முன்னோட்ட அரங்கம் (Preview Theatre) ஒன்றும் இணைத்து கட்டப்பட்டு வருகிறது.
அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சங்க கட்டிடம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், `நடிகர் சங்க கட்டிடம் அழகாகவும் சிறப்பாகவும் உருவாகி வருகிறது' என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்டிட பணியாளர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு, அங்கு கட்டப்படும் மண்டபத்தில் தான் தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்க கட்டிடத்திற்காக நடிகர், நடிகைகள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Vishal #NadigarSangamBuilding