

படம்குறித்து விஷால் கூறும் போது,
நடக்கும் போது, சிரிக்கும் போது, ரொமனஸ் செய்யும் போது இப்படி தான் இருக்கும் வேண்டும் என்று மிஷ்கின் அவருடைய பாணியில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். வழக்கமாக நான் என்னுடைய படங்களில் கை, கால்களை ஆட்டி வசனம் பேசி தான் பழக்கம். ஆனால் துப்பறிவாளனில் நான் ஏற்று நடித்திருக்கும் கணியன்பூங்குன்றன் கதாபாத்திரம் எப்போதும் அமைதியாக தான் இருக்கும். அதிபுத்திசாலிகள் அதிகம் பேசமாட்டார்கள் அதை போல் தான் இந்த கதாபாத்திரம் இருக்கும். துப்பறிவாளன் டிடெக்டிவ் ஜானர் படம்.
என்னுடைய வாழ்க்கையிலேயே பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் படம் துப்பறிவாளன் தான். இந்த படத்துக்கு பாடல்கள் தேவை இல்லை. இப்போது மக்கள் பாடல்களே இல்லாமல் வெளிவரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள். நல்ல கதையம்சம் கொண்ட படத்தை பார்க்க ஆவலாக இருக்கும் ரசிகர்களுக்கு துப்பறிவாளன் விருந்தாக இருக்கும். என்னுடைய சினிமா கேரியரில் நான் நடித்த முழு நீள ஸ்டைலிஷான படம் துப்பறிவாளன் தான்.
இப்படத்துக்காக மிஷ்கின் ஸ்டைல் கண்ணாடி மாட்டி நடித்துள்ளேன். மிஷ்கினுக்கு என்னுடைய உடல் மொழி ஸ்டைல் என்று அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று ஆசை. துப்பறிவாளனில் வரும் சைனீஸ் ஹோட்டல் சண்டை காட்சி ரசிகர்களை மிரட்டும். இந்த சண்டை காட்சியில் நடிக்க வியட்நமிலிருந்து சண்டை கலைஞர்கள் வந்தார்கள். ஸ்டன்ட் கலைஞர்கள் ஏழு பேரோடு ஒரேடியாக அடுத்தடுத்து சண்டை போட்டது புதுமையாக இருந்தது. படத்தில் ஒரே ஒரு தீம் சாங் மட்டும் உள்ளது.
இப்படத்தில் அனு இமானுவேல் பிக்-பாக்கெட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் பாக்யராஜ் சாரை நீங்கள் மூன்றாவது ஷாட்டில் தான் கண்டுபிடிப்பீர்கள். அவர் இதுவரை பண்ணாத புதுமையான ஒரு நெகடிவ் ரோலை செய்துள்ளார். வினய் தான் படத்தில் மெயின் வில்லன்... படத்தில் 6.2 ஹீரோ - 6.2 வில்லன்... `துப்பறிவாளன்' வந்தால் இன்னும் புதுமையான நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
அடுத்து `இரும்புத்திரை', `சண்டைகோழி-2', `டெம்பர்' ரீமேக் என்று வித்தியாசமான படங்கள் வரவுள்ளது. நான் இயக்குநர் மிஷ்கினை விலைக்கு வாங்கிவிட்டேன். அவர் அடுத்து இயக்கும் படம் VFF-க்கு தான். அவர் தொடர்ந்து என்னை வைத்து படங்கள் இயக்குவார். துப்பறிவாளனில் கடைசி 20 நிமிடம் மிகப்பெரிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்.