சினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் - விஷால் பட நடிகை புகார்

சினிமா விருந்துகள் போதை மாத்திரைகள் இல்லாமல் நடப்பது இல்லை என்று விஷால் பட நடிகை புகார் கூறி இருக்கிறார்.
விஷால்
விஷால்
Published on

கன்னட பட உலகிலும் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக டி.வி. நடிகை அனிகா கைதாகி உள்ளார். இவர் போதைபொருட்களை வாங்கி நடிகர், நடிகைகளுக்கு விற்றதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தெலுங்கு பட உலகிலும் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழில் விஷாலுடன் ஆம்பள படத்தில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகை மாதவி லதா இதுகுறித்து கூறும்போது, “தெலுங்கு சினிமாவில் போதை பழக்கம் உள்ளது. சினிமா விருந்துகள் போதை மாத்திரைகள் இல்லாமல் நடப்பது இல்லை. முன்னணி நடிகர்கள் அரசியல் செல்வாக்கினால் போதை பொருள் வழக்கில் இருந்து தப்பி உள்ளனர். போதை பொருள் வழக்கை விசாரித்த அதிகாரியையும் வேறு துறைக்கு மாற்றி விட்டனர்” என்றார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com