15 மாணவர்கள் கல்லூரியில் படிக்க விஷால் உதவி

இருளர் சமுதாயத்தை சேர்ந்த 15 மாணவர்கள் கல்லூரியில் படிக்க விஷால் உதவி செய்துள்ளார்.
15 மாணவர்கள் கல்லூரியில் படிக்க விஷால் உதவி
Published on

மாணவ, மாணவியரின் கல்விக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மிக சிறந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சீட் வாங்கி கொடுத்துள்ளார். அவர்களுடைய படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு தன்னுடைய உதவி அறக்கட்டளையின் மூலம் உதவி செய்கிறார்.

இந்த ஆண்டு கல்வியில் பின்தங்கிய இருளர் சமூதாயத்தில் இருந்து பிளஸ்-2 வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 15 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மிகச்சிறந்த கல்லூரியான லயோலா கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்துள்ளார். அவர்கள் படிப்புக்கான அனைத்து செலவையும் ஏற்று இருக்கிறார். அந்த மாணவர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com