இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்காக ராட்சத பலூனில் பறக்கும் விஷால், இளையராஜா

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை தமிழ்நாடு பலூன் திருவிழாவில் வைத்து இளையராஜா, விஷால் தொடங்கி வைக்கிறார்கள். #Ilayaraja75 #Vishal #ProducerCouncil
இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்காக ராட்சத பலூனில் பறக்கும் விஷால், இளையராஜா
Published on

இசை அமைப்பாளர் இளையராஜாவை பெருமைப்படுத்தும் விதமாக இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்த இருக்கிறது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமையுடன் வழங்கும் ‘இளையராஜா-75 நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 2, 3-ந் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடக்க நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

வரும் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு, செங்கல்பட்டு அருகே ‘மகேந்திரா வேர்ல்டு சிட்டி‘யில் நடைபெறும் 5-வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.

இங்கு ‘இளையராஜா-75 என்ற பெயரில் பலூன்கள் பறக்கவிடப்படும். அதில் ஒரு ராட்சச பலூனில் இளையராஜா பயணம் செய்வார். மற்றொரு பலூனில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பயணம் செய்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducerCouncil

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com