விமலின் அதிரடி இன்னிங்ஸ் ஆரம்பம்

சமீபகாலமாக விமல் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்தடுத்து படங்களை வெளியிட இருக்கிறார் விமல்
விமலின் அதிரடி இன்னிங்ஸ் ஆரம்பம்
Published on

இந்த நிலையில் விமல் நேற்று விமரிசையாக தனது பிறந்தநாளை கொண்டாடினார்.. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் கலந்துகொண்டனர். அத்துடன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது தான் தயாரித்து நடித்துவரும் ‘மன்னர் வகையறா’ படத்தை தொடர்ந்து தான் தயாரித்து நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பையும் வெளியிட்டார்.

தற்போது மன்னர் வகையறாவை முடித்த கையுடன் இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார் விமல். அதனை தொடர்ந்து 'வெற்றிவேல்' பட இயக்குனர் வசந்தமணி இயக்கத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com