அக்டோபரில் வெளியாகும் விக்ரமின் `ஸ்கெட்ச்' டீசர்

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் `ஸ்கெட்ச்' படத்தித்தின் டீசர் எப்போது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அக்டோபரில் வெளியாகும் விக்ரமின் `ஸ்கெட்ச்' டீசர்
Published on

வடசென்னை பின்னணியில் ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

`ஸ்கெட்ச்' படத்தின் டீசர் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும். டீசர் ரிலீஸ் தேதியை வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரித்துள்ள `ஸ்கெட்ச்' படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com