இறுதிக்கட்டத்தில் கடாரம் கொண்டான் படப்பிடிப்பு

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KadaramKondan #ChiyaanVikram
இறுதிக்கட்டத்தில் கடாரம் கொண்டான் படப்பிடிப்பு
Published on

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பை ஜனவரிக்குள் முடித்துவிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை `தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார்.

மலேசியாவில் முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர், சென்னை திரும்பி படக்குழு பூந்தமல்லி சாலையில் பிரம்மாண்ட அரங்குகளை அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். விக்ரமுடன் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. `கடாரம் கொண்டான்' படப்பிடிப்பை முடித்த பின்னர் விக்ரம் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

அந்த படத்தை தொடர்ந்து, பிரம்மாண்டமாக உருவாகும் `மகாவீர் கர்ணா' படத்தில் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KadaramKondan #ChiyaanVikram

X

Maalai Malar
www.maalaimalar.com