விக்ரம் வேதா படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `விக்ரம் வேதா' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #VikramVedha
விக்ரம் வேதா படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு
Published on

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் `விக்ரம் வேதா'. 100 நாட்களை கடந்து வெற்றிகரமான ஓடிய இந்த படத்தை யு நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்திருந்தார். சாம்.சி.எஸ். இசையமைத்திருந்தார்.

தமிழில் அமோக வரவேற்பு கிடைத்ததையடுத்து இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டனர். அதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

யு நாட் ஸ்டூடியோஸ் உடன் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் பிளான் சி ஸ்டூடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இந்தியிலும் இந்த படத்தை புஷ்கர் - காயத்ரியே இயக்குகின்றனர். 

இந்த படத்தில் மாதவன் - விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #VikramVedha

X

Maalai Malar
www.maalaimalar.com