சத்யராஜுக்காக மீண்டும் இணையும் விக்ரம் வேதா

விக்ரம் வேதா படத்திற்கு பிறகு நடிகர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் சத்யராஜுக்காக மீண்டும் இணைகின்றனர்.
சத்யராஜுக்காக மீண்டும் இணையும் விக்ரம் வேதா
Published on

சர்ஜுன்.கே.எம். இயக்கி வரும் இந்த படத்தை சி.பி.கணேஷின் டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தர் அண்ணாமலை நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சுந்தரமூர்த்தி.கே.எஸ். இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கிரைம் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படுகிறது. அந்த டிரைலரை விக்ரம் வேதா படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி வெளியிடுகின்றனர். `எச்சரிக்கை' படத்தின் டிரைலரை இன்று நடிகர் மாதவன் டுவிட்டரிலும், விஜய் சேதுபதி பேஸ்புக் பக்கத்திலும் வெளியிடுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com