டோக்கியோ செல்லும் விக்ரம் வேதா

மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் டோக்கியோ திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.
டோக்கியோ செல்லும் விக்ரம் வேதா
Published on
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சாம் இசையமைத்த இப்படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்தார். சஷிகாந்த் தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை கவர்ந்தது. மேலும் விமர்சன ரீதியில் மட்டுமன்றி, வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விக்ரம் வேதா படத்திற்கு மேலும் கவுரம் கிடைத்துள்ளது. ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிட விக்ரம் வேதா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விக்ரம் வேதா பட தயாரிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிட உலகளவில் தேர்வான 16 திரைப்படங்களில் விக்ரம் வேதாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
X

Maalai Malar
www.maalaimalar.com