பாகுபலியை பின்னுக்கு தள்ளிய விக்ரம் வேதா

பிரபல இணையதளத்தின் 2017 ஆண்டின் சிறந்த 10 இந்தியப் படங்கள் பட்டியலில் 'விக்ரம் வேதா' முதல் இடத்தைப் பிடித்து, பாகுபலியை பின்னுக்கு தள்ளியுள்ளது.
பாகுபலியை பின்னுக்கு தள்ளிய விக்ரம் வேதா
Published on

இணையதளங்களில் படங்களைப் பற்றிய தகவல்களை கொடுப்பதில் முக்கியமானது ஐஎம்டிபி (IMDb). இந்த இணையதளம் 2017-ம் ஆண்டிற்கான சிறந்த 10 இந்திய படங்களை வெளியிட்டு இருக்கிறது.

இதில் 10-வது இடத்தில் மலையாள படமான 'தி க்ரேட் பாதர்', 9-வது இடத்தில் 'மெர்சல்', 8-வது இடத்தில் இந்திப் படமான 'ஜாலி எல்.எல்.பி 2', 7-வது இடத்தில் இந்திப் படமான 'டாய்லெட்- ஏக் பிரேம கதா', 6-வது இடத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான 'தி காஸி அட்டாக்', 5-வது இடத்தில் இந்திப் படமான 'இந்தி மீடியம்', 4-வது இடத்தில் இந்திப் படமான 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்', 3-வது இடத்தில் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி', 2-வது இடத்தில் ராஜமெளலியின் 'பாகுபலி - 2' மற்றும் முதல் இடத்தில் மாதவன் - விஜய் சேதுபதி நடித்த 'விக்ரம் வேதா' என பட்டியலிட்டு இருக்கிறார்கள்.

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்று, அதிக ரசிகர்களை கவர்ந்த 'விக்ரம் வேதா' படத்துக்கு IMDb இணையம் முதல் இடத்தைக் கொடுத்திருப்பது படக்குழுவினரை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

விக்ரம் வேதா படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார், ஸ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். புஷ்கர் காயத்ரி இயக்கி இருந்தார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com