விக்ரம் ஸ்கெட்ச் போடும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம்-தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் ஸ்கெட்ச் போடும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
Published on

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் பின்னணி பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாராகி உள்ள ஸ்கெட்ச் படம் ஜனவரி மாதம் பொங்கல் திரு நாளன்று படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஸ்கெட்ச் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. விக்ரம், தமன்னாவுடன் இப்படத்தில், ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com