பக்கா தோனி ரசிகராக மாறிய விக்ரம் பிரபு

கிரிக்கெட் வீரர் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் விக்ரம் பிரபு ‘பக்கா’ தோனி ரசிகராக மாறியிருக்கிறார்.
பக்கா தோனி ரசிகராக மாறிய விக்ரம் பிரபு
Published on

இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி நடிக்கிறார்கள். மேலும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும், அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் இப்படத்தை தயாரிப்பதோடு, முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.

சத்யா இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.சூர்யா இப்படத்தை இயக்குகிறார். படம் பற்றி விக்ரம் பிரபு கூறும்போது, ‘திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கிரிக்கெட் ரசிகரான நான் தோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன். ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா (நிக்கி கல்ராணி). கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா (பிந்து மாதவி). இப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான ‘பக்கா’ படம். நம்மால் மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்கும்..

இதுவரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம். எனக்கு புதிய பரினாமத்தை வெளிக்கொண்டு வரும் படமாக அமையும். கமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும் என்றார் விக்ரம்பிரபு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com