திமுக தலைவர் கருணாநிதி மறைவு - நடிகர் விக்ரம் இரங்கல்

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், கருணாநிதி மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
திமுக தலைவர் கருணாநிதி மறைவு - நடிகர் விக்ரம் இரங்கல்
Published on

சென்னை:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆளுநர் பன்வாரி லால் பிரோகித், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

இதற்கிடையே நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, 

தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்துமுறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமைக் கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 

தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Vikram

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com