சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்

விக்ரம், தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழாவில், நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் விக்ரம். #SketchSuccessMeet
சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்
Published on

விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விக்ரம் பேசும்போது, ‘கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். கேமராமேன் சுகுமார் மூலமா டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். அந்த கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டது. இதுக்காக நான் சுகுமாருக்கு தான் நன்றி சொல்லணும். இந்த படத்துக்கு சுகுமார் பயங்கரமா வொர்க் பண்ணியிருக்கார். படத்தோட டோன் ரியலிஸ்டிக்காகவும், கமர்சியலாவும் இருக்குறதுக்கு அவர் தான் காரணம். அதவிட டைரக்டர் விஜய் இந்த கதையை பிரசண்ட் பண்ண ஸ்டைல் ரொம்ப புதுசா இருந்துச்சி. அவரோட காஸ்டிங் ஹண்ட்டிங்லேர்ந்து சின்ன சின்ன டீடெயில் வரைக்கும் அவரு எல்லாம் புதுசா இருக்கணும்னு நெனச்சி பண்ணார். அவரோட டயலாக், சென்ஸ் ஆஃப் ஹியூமர்,  பஞ்ச் டயலாக், ஸ்லாங், மியூசிக் சென்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். சூட்டிங் ஸ்பாட்ல நா கேட்டா கூட பஞ்ச் டயலாக்க உடனே சொல்வார். மாத்தி சொல்லுங்கன்னு சொன்னாக்கூட உடனே மாத்தி அத விட பவர்ஃபுல்லா சொல்வார். அவ்வளவு டேலண்ட் உள்ள கிரியேட்டர். இந்த படத்தோட பர்ஸ்ட் ஓபனிங்கே ‘கனவே கனவே..’ என்ற பாடலோடத்தான் ஆரம்பிச்சது. 

இந்த படம் ரிலீஸானப்புறம் தொடர்ந்து முப்பது நாப்பது தடவ படத்த ஆடியன்சோட பாத்துட்டு இருக்கார். ஆடியன்ஸ் ரசிக்கிறத இவர சந்தோஷமா ரசிச்சார். நான் எப்படி 1999 டிசம்பர் 10 சேது ரிலீஸானப்போ ஒவ்வொரு தியேட்டருக்கா போயி ஆடியன்ஸ் என்ஜாய் பண்றத ரசிச்சோனே அதே மாதிரி இப்போ டைரக்டர் விஜய் ரசிச்சிட்டு இருக்கார். இந்த சந்தோஷம் எப்படியிருக்கும்னா ஒரு பொண்ண லவ் பண்றா மாதிரி இருக்கும். மனசுல சந்தோஷம் இருக்கும். தூக்கம் வராது. பசியிருக்காது. இந்த மாதிரி ஒரு வெற்றியை கொடுத்ததுக்காக டைரக்டர் விஜய் சந்தருக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன். 

இந்த படத்துக்கு என்னோட ஃபேன்ஸ் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ஒவ்வொரு வீடியோவ சோசியல் மீடியாவுல அப்லோட் பண்றதிலிருந்து. ஸ்கெட்ச்சோட டீ சர்ட்ட போட்டுகிட்டு டான்ஸ் ஆடிகிட்டே படம் பாத்து என்ஜாய் பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. ஒவ்வொரு ரசிகர்களும் அவங்க வீட்ல ஒருத்தர என்ன கொண்டாடுறது எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட். 

என்னோட லைப்ல லாஸ்ட் இயர் என்னோட பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சி. என்னோட அப்பா தவறிட்டாங்க. ஆனாலும் இந்த மீடியாவோட சப்போர்ட் நா எதிர்பார்த்தவிட பெரிசா இருந்திச்சி. அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது சாதாரணமானதாகத்தான் இருக்கும். இருந்தாலும் நன்றி.

சூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான் தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்ல இரண்டு பேரும் ஹீரோவா நடிக்க ரெடி. இல்ல இன்னொரு படத்துல அவர் கூட சேர்ந்து நடிக்கணும். இருந்தாலும் சூரி ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன். படப்பிடிப்புக்கு வருவது தெரியாது. போவதும் தெரியாது. பாஸ்ட்டா போற ஸ்கிரிப்ட்ல இவரோட சீன் ஸ்பிடு பிரேக் மாதிரி இருந்ததால தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான் தான். அதுக்காக சூரிகிட்ட நா சாரி கேட்டுகிறேன். இந்த படத்திற்காக உழைத்து அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com