விஜய், சிம்பு பட நடிகைக்கு கால் முறிவு

நடிகர் விஜய்யுடனும், சிம்புடனும் ஜோடியாக நடித்தவரும், கன்னட, தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்த ரக்‌ஷிதாவிற்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
விஜய், சிம்பு பட நடிகைக்கு கால் முறிவு
Published on
சிம்பு நடிப்பில் வெளியான ‘தம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரக்‌ஷிதா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதில் ரக்‌ஷிதா கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தை தொடர்ந்து விஜய்யுன் ‘மதுர’ படத்தில் நடித்தார். இதன்பிறகு கன்னட, தெலுங்கு மொழி படங்களில் கவனம் செலுத்தினார்.

கன்னட நடிகர் பிரேமை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் செட்டிலானார். பிறகு நடிப்பில் கவனத்தை குறைத்துக்கொண்டு கர்நாடக அரசியலில் குதித்தார். அரசியலில் எதிர்பார்த்தளவுக்கு ஜொலிக்க முடியவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ரக்‌ஷிதாவுக்கு கால் எலும்பு முறிந்ததாக தகவல் வெளியானது. அதை உறுதி செய்த அவர் வலது காலில் எலும்பு முறிவுக்காக மாவுகட்டு போட்டிருக்கும் காட்சியை படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். தற்போது குணம் அடைந்து வருவதாகவும் விரைவில் நடக்க தொடங்கிவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
X

Maalai Malar
www.maalaimalar.com