பட விளம்பரத்துக்காக புதிய யுக்தியை கையாளும் விஜய்சேதுபதி படக்குழு

‘ஒரு நல்ல நான் பார்த்து சொல்றேன்’ பட விளம்பரத்துக்காக விஜய்சேதுபதி தலைமையில் மலேசியாவில் நட்சத்திர கிரிக்கெட் அணி நாளை கிரிக்கெட் விளையாட இருக்கிறது.
பட விளம்பரத்துக்காக புதிய யுக்தியை கையாளும் விஜய்சேதுபதி படக்குழு
Published on

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நான் பார்த்து சொல்றேன்’. 7 சீஸ் எண்டர்டெயின்மென்ட், அமீநாராயணா எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.

இதன் தயாரிப்பாளர்கள் இந்த படத்தை விளம்பரம் செய்வதற்காக புதியமுறையை பயன்படுத்துகிறார்கள். அதன்படி, மலேசியாவில் நடைறெ இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மோதும் அணிகளில் ஒன்றான ‘ராம்நாடு ரினோஸ்’ அணியை விலைக்கு வாங்கி உள்ளனர். இது கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதன் மூலம், தங்கள் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் ‘ராம்நாடு ரினோஸ்’ அணிக்கு விஜய்சேதுபதி தலைமை தாங்குகிறார். இதில் நடிகர்கள் பரத், போஸ் வெங்கட், ஜி.வி.பிரகாஷ், கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

நாளை மாலை மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலை விழாவ ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் இடம் பெறுகிறது. முன்னதாக காலையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் விஜய்சேதுபதி தலைமையிலான ‘ராம்நாடு ரினோஸ்’ அணி களம் இறங்குகிறது. இதனால் இந்த படம் குறித்து ரசிகர்கள் அதிகம் பேச வாய்ப்பு ஏற்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com