சமூக வலைத்தளத்தில் வைரலான விஜய்சேதுபதியின் ஷில்பா டான்ஸ்

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஷில்பா டான்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. #VijaySethupathi
சமூக வலைத்தளத்தில் வைரலான விஜய்சேதுபதியின் ஷில்பா டான்ஸ்
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ‘ஆரண்ய காண்டம்’ இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடிக்கிறார். மேலும் விஜய்சேதுபதியுடன் பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்சேதுபதிக்கு இயக்குனர் நடனம் ஆட சொல்லிக் கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #SuperDeluxe #VijaySethupathi

X

Maalai Malar
www.maalaimalar.com