அசுரவதத்திற்கு விஜய் சேதுபதியை அழைத்த சசிகுமார்

மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அசுரவதம்’ படத்திற்கு விஜய் சேதுபதியையை அழத்திருக்கிறார் சசிகுமார். #Asuravadham
அசுரவதத்திற்கு விஜய் சேதுபதியை அழைத்த சசிகுமார்
Published on

‘கொடிவீரன்’ படத்திற்கு பிறகு சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அசுரவதம்’. இப்படத்தை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ புகழ் எம்.மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்து வருகிறார். சமீபத்தில், இதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீசரை இயக்குனர் கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்ததாக இதன் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி நாளை மாலை 3 மணிக்கு வெளியிட இருக்கிறார். 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com